ஜேக் கெயின் எழுதிய ஹைக்கூ:

யாரோ ஒருவரின் செய்தித்தாள்
பனியில் வழுக்கிச் சென்றது
அதிகாலை 4.00 மணிக்கு.

வாசித்த போது அதை தமிழாய் யோசித்ததில் தோன்றிய வரிகள் இவை:

பால்காரர்
திறந்து வைத்த செவிகளில்
பட்சிகளின் பாடல்.